தவெக மாநாட்டிற்கு போனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த காளீஸ்வரன் என்ற மாணவர்  
செய்திகள்

தவெக மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி மாணவர் பலி!

Staff Writer

தவெக மாநாட்டிற்கு போனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நாளை மதுரை அருகே உள்ள பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக அக்கட்சியை சேர்ந்தவர்கள் மாநாட்டுக்காக பேனர்களை வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளத்தை சேர்ந்தவர் செல்லக்கனி. இவரது மகன் காளீஸ்வரன் (வயது-19) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று தவெக மாநாட்டிற்கான வரவேற்பு பேனரை வைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனே அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், காளீஸ்வரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக வன்னியம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.