நடிகர் பார்த்திபன் 
செய்திகள்

‘சுஹாசினிக்குக்கு திமிர் அதிகம்’ – ஜாலியாக பேசிய பார்த்திபனுக்கு மேடையிலேயே பதிலடி!

Staff Writer

நடிகை சுஹாசினிக்கு தன்னுடைய அழகின் மீது திமிர் இருப்பதாக நடிகர் பார்த்திபன் கிண்டலாக பேசியுள்ளார்.

வரலட்சுமி, சுஹாசினி உள்ளிட்டோர் நடிப்பில் கிருஷ்ணா ஷங்கர் இயக்கியிருக்கும் தி வெர்டிக்ட் என்ற படத்தின் விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பார்த்திபன் பேசுகையில்:

"சுஹாசினிக்கு தான் அழகு என்கிற திமிர் அதிகம். எந்த ஒரு பெண்ணும் 28 வயதுக்கு மேல் தன்னுடைய வயதை வெளியே சொல்லமாட்டார். ஆனால் இவரோ எனக்கு ஃபோன் செய்து பார்த்திபன் எனக்கு 50 வயது என்று சொல்வார். 50 வயதிலும் தான் எவ்வளவு அழகு என்ற திமிர் அவரிடம் இருக்கிறது. எனக்கு மணிரத்னம் மேல் காதல்; மணிரத்னத்துக்கு சுஹாசினி மீது காதல்" என்றார்.

நடிகர் சரத்குமாரின் மகளும், முன்னணி நடிகையுமான வரலட்சுமி 'தி வெர்டிக்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா சங்கர் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சுஹாசினி, சுருதி ஹரிஹரன், வித்யுலேகா, தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பட விழாவில் நடிகை சுஹாசினி பேசும்போது, "சின்ன வயதில் உங்கள் நடிப்பை பார்த்தேன் என்று பலரும் சொல்லும்போதெல்லாம், 'அவ்வளவு சீனியர் ஆகிவிட்டோமா?' என்று எண்ணத்தோன்றும். ஆனால் வயதாகிவிட்டதின் சிறப்பு அமெரிக்காவில் இருக்கும்போது புரிந்தது.

அமெரிக்காவில் நடந்த படப்பிடிப்பின்போது, என் ரசிகை ஒருவர் எனக்காக, ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் சாப்பாடு செய்துகொண்டு வந்தார். அப்போதுதான் என் வயதின் முக்கியத்துவம் புரிந்தது'' என்று பேசினார்.

இதையடுத்து பார்த்திபன் பேசும்போது, “எனக்கு 50 வயது என்று வெளிப்படையாக சொல்லும் அழகி என்றால் அது சுஹாசினி தான். 28 வயதுக்கு பிறகு பெண்கள் வயதை சொல்லமாட்டார்கள். ஆனால், தனது அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி', என்று குறிப்பிட்டார்.

அப்போது சுஹாசினி எழுந்து, 'எனக்கு 63 வயதாகிவிட்டது. தெளிவாக சொல்லுங்கள்' என்றார். இதையடுத்து, 'பார்த்தீர்களா, இதுதான் திமிரு' என்றார் பார்த்திபன். இது கலகலப்பூட்டும் விதமாக அமைந்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram