உச்சநீதிமன்றம் 
செய்திகள்

சீமான் வழக்கு- உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

Staff Writer

நா.த.க. தலைவர் சீமான் மீதான பாலியல்  வன்கொடுமை வழக்கில் சில நாள்களாக உயர்நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறை விசாரணையை மேற்கொண்டது. 

முதலில் பெங்களூரில் நடிகை விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் சீமானிடம் விசாரணை நடத்த அவருக்கு அழைப்பாணை அனுப்பினர். ஆனால், அவரால் கலந்துகொள்ள முடியாது என வழக்குரைஞர்கள் மட்டும் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விளக்கம் அளித்துவிட்டு வந்தனர்.

அதன்பிறகு மறுநாளே சீமானை நேரில் விசாரணைக்கு வருமாறு அவரின் வீட்டில் வளசரவாக்கம் காவல்நிலையத்தினர் அழைப்பாணையை ஒட்டினர். அதை அவர் வீட்டுப் பணியாளர்கள் கிழித்ததையொட்டி பிரச்னையாகி, மறுநாள் மாலையில் சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்தினர் முன்னிலை ஆனார்.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் காவல்துறை விசாரணைக்குத் தடைகேட்டு வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. அதில் இன்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.