ரெட்ரோ படக்குழுவினருடன் அகரம் அறக்கட்டளைக்கு நிதியுதவி வழங்கிய சூர்யா 
செய்திகள்

'ரெட்ரோ' லாபத்தில் ரூ. 10 கோடியை அகரம் அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா!

Staff Writer

'ரெட்ரோ' திரைப்படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வெற்றி விழாவும் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா 'ரெட்ரோ' படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நடிகர் சூர்யா 'அகரம் பவுண்டேஷன்' என்ற அமைப்பு மூலம் படிப்பதற்கு பணம் கட்ட முடியாத ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram