ஜோதிகா - சூர்யா 
செய்திகள்

‘சொர்க்கத்தில் இன்னொரு நாள்…’வைரலாகும் சூர்யா – ஜோதிகா வீடியோ!

Staff Writer

நடிகை ஜோதிகா வெளியிட்ட புதிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் கவனிக்கப்படும் இணையான சூர்யா - ஜோதிகா காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். பல நட்சத்திரங்கள் மேல் கிசுகிசுப்பு, விவாகரத்து வதந்திகள் எழுந்தாலும் இவர்கள் மீது அப்படி எந்த செய்திகளும் வந்ததில்லை.

ரெட்ரோ வெற்றியைத் தொடர்ந்து சூர்யா, வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன் சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள சீஷெல்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

அங்குள்ள அழகான கடற்கரைகள், மலைகள், பூங்காங்கள் உள்ளிட்ட இடங்களில் தாங்கள் மேற்கொண்ட பயணத்தை வீடியோவாக ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் சூர்யாவை குறிப்பிட்டு, “சொர்க்கத்தில் உங்களுக்கும் எனக்கும் இன்னொரு நாள்” என வர்ணித்துள்ளார்.

இந்த வீடியோவக் கண்ட ரசிகர்கள் ’பெஸ்ட் ஜோடி’, விண்டேஜ் சூர்யா – ஜோதிகா’ என பரவசத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.