செய்திகள்

தமிழிலும் பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு!

Staff Writer

தமிழ்நாட்டு அரசின் பொருளாதார நிலை தொடர்பான ஆய்வறிக்கை முதல் முதலாக இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மாநில திட்டக்குழுவின் சார்பில் நடப்பு நிதியாண்டுக்கான வருடாந்தர வரவு- செலவு அறிக்கைக்கு முன்னர் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 

கடந்த மாதம் 14ஆம்தேதியன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசால் அரசின் வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாளில் தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. 

அத்துடன், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்னூலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்காக அது பதிவேற்றம் செய்யப்பட்டது. யார் வேண்டுமானாலும் எந்தக் கடவுச் சொல்லும் இல்லாமல் இணையக் கல்விக் கழகத் தளத்தில் இந்த அறிக்கையைப் படிக்கும்படி வசதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று மதியம்வரை, அந்த ஆங்கில ஆய்வறிக்கையை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளனர்.

இன்று சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடர் நிறைவுபெற்ற நிலையில், அவையில் தமிழிலும் உருவாக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

அரசியல், பொருளாதாரம், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் எனப் பல தரப்பினருக்கும் தமிழில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை பயன்படும்படியாக இதுவும் மின்னூலகத்தில் இலவசப் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது. 

மின்னூலுக்கான இணைப்பு:

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU3juId