காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 48ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. புதுதில்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகத் தரப்பில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு உறுப்பினரும் அரசு நீர்வளத்துறை செயலாளருமான ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்பொழுது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 53.444 டி.எம்.சி ஆக உள்ளது எனவும், அணையிலிருந்து வினாடிக்கு 2,503 கன அடி நீர் குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் திறந்துவிடப்படுகிறது என்றும்
கர்நாடக அணைகளின் நீர் இருப்பினைக் கருத்தில்கொண்டு, தமிழகத்திற்கு 2026, பிப்ரவரி முதல் மே மாதம்வரை வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நீர் அளவான 10 டி.எம்.சி. நீரை மாதத்திற்கு 2.5 டி.எம்.சி நீர் வீதம் உச்சநீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறும் தமிழகத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.