புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்கள் நேரடிச் சேர்க்கை 31.12.2024 வரை நடைபெறும் என்று வேலைவாய்ப்பு - பயிற்சித் துறையின் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு 2024-2025-ம் ஆண்டில் கீழ்காணும் மாவட்டங்களில் தெரிவிக்கப்பட்ட 10 இடங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான வேலைவாய்ப்புக்கேற்றவாறு தொழில் 4.0 மற்றும் நவீன கால தொழிற்பிரிவுகளுடன் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. இப்புதிய தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-2025 ம் கல்வியாண்டிற்கான தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது சேர்க்கைக்கான கால அவகாசம் 31.12.2024வரை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டம்
புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்ட இடத்தின் பெயர்
1.
கடலூர்
வேப்பூர்
2
திருவண்ணாமலை
செங்கம்
3
திண்டுக்கல்
குஜிலிம்பாறை,
4
இராமநாதபுரம்
கமுதி
5
கிருஸ்ணகிரி
போச்சம்பள்ளி
6
நாமக்கல்
சேந்தமங்கலம்
7
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை
8
திருவாரூர்
கூத்தாநல்லூர்
9
திருப்பத்தூர்
நாட்றாம்பள்ளி
10
தூத்துக்குடி
ஏரல்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.
சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 85% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்
இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அலைபேசி/ வாட்சாப் எண்: 9499055689 “ என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.