முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சம்பத் 
தமிழ் நாடு

த.வெ.க.வில் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு வாரிவழங்கிய விஜய்!

Staff Writer

அ.தி.மு.க.விலிருந்து கட்சிமாறி விஜய் தலைமையிலான த.வெ.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவிகளை விஜய் வாரி வழங்கியுள்ளார். 

த.வெ.க. சார்பில் இன்று மாலையில் புதிய பதவி அறிவிப்புப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உட்பட 15 பேருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் ஆனந்தன், கடலூர் சம்பத், உருமலை இராதாகிருஷ்ணன், கே.வி.இராமலிங்கம், எம்.ஆனந்தன், கடம்பூர் இராஜு, பச்சைமால், வெல்லமண்டி நடராஜன், சிவபதி, வைகைச் செல்வன், வளர்மதி ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.