தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் 
தமிழ் நாடு

11.83 இலட்சம் பேர் வாக்காளராகச் சேர்க்க விண்ணப்பம்!

Staff Writer

தமிழ்நாட்டில் கடந்த மாதம் மூன்றாவது வாரத்தில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடங்கியது. முன்னதாக வாக்காளர் தீவிரத் திருத்தத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஏராளமான வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். 

அவர்களில் பல காரணங்கள் கூறப்பட்டாலும், நியாயமான காரணம் இல்லாமலும் ஏராளமானவர்கள் நீக்கப்பட்டதும் இறந்துபோனவர்கள் சேர்க்கப்பட்டதும் செய்திகளாக வெளியாகின. 

இந்நிலையில், கடந்த மாதம் 19ஆம்தேதி முதல் புதியதாகப் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று ஜனவரி 5ஆம்தேதிவரை மாநிலத்தில் 11,83, 576 பேர் படிவம் 6 மூலம் புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். 

தவறாகச் சேர்க்கப்பட்டிருந்த 19ஆயிரத்து 566 பேர் பெயரைநீக்க விண்ணப்பம் செய்துள்ளனர். 

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி இத்தகவலை வெளியிட்டுள்ளார்.