தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பறக்கும் படையினர் நடத்திய சோதனைகளில் 1213 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
”சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள், 150 செலவினப் பார்வையாளர்களையும் நியமித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக, 83,875 காவல்துறை பணியாளர்கள், 40,427 காவல்துறை அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 300 கம்பெனிகளை பாதுகாப்பான, சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துவதற்காக நியமித்துள்ளது. அந்த கம்பெனிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளன.
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
20ஆம் தேதி நிலவரப்படி இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்கள் மதிப்பு விவரம் : (கோடிகளில்)
1. ரொக்கம் - ரூ.169.85
2. மதுபானம் - ரூ. 2.95
3. போதைப்பொருட்கள் - ரூ. 82.73
4. (தங்கம்/வெள்ளி) - ரூ. 650.87
5. இதர பொருட்கள் / இலவசங்கள் - ரூ. 306.34
மொத்தம் - ரூ. 1212. 74” என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.