தமிழகத்தின் பதினாறாவது சட்டமன்றம் முறைப்படி இன்று கலைக்கப்பட்டது. மாநிலத்தின் பொறுப்பு ஆளுநர் இதற்கான அறிவிப்பை இன்று மாலையில் வெளியிட்டார். நாளை புதிய முதலமைச்சர் பதவியேற்பு எனக் கூறப்படும் நிலையில், அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.