சென்னை புத்தகக் காட்சியில் உள்ள கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் அரங்கில் (எண் :493 - 494 ) 17 நூல்கள் வெளியிடப்பட்டன.
கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ் வழங்கும் பொன்மணி புதையல் திட்டத்தின் வெளியீடாக மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, மகாகவி பாரதியார்,ஏ.கே. செட்டியார், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை, சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி, கவிஞர் கருணானந்தம்,புதுமைபித்தன் போன்ற தமிழறிஞர்கள்,எழுத்தாளர்கள் மக்சிம் கார்க்கி உள்ளிட்ட ரஷ்ய எழுத்தாளர்கள் எழுதிய 16 நூல்களை டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட மேனாள் பொது நூலக இயக்குநர் ந. ஆவுடையப்பன் பெற்றுக் கொண்டார். அதே நிகழ்வில் எழுத்தாளர் ஸிந்துஜா தொகுத்து எழுதிய 'ஆல்பர் காம்யூவிலிருந்து ஹான் காங் வரை ' என்கிற நோபல் பரிசு பெற்றவர்களின் உரைகள் அடங்கிய நூலையும் டாக்டர் நல்லி வெளியிட டாக்டர் எஸ். அமுதகுமார் பெற்றுக் கொண்டார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், ரோஜா முத்தையா நிறுவனத்தின் சுந்தர் கணேசன், பாரதி புத்தகாலயம் நாகராஜன், கண்மணி கிரியேட்டிவ் விஜயகுமாரி, அபிராமி கண்மணி உடன் இருந்தனர் .