அமுதா ஐஏஎஸ் 
தமிழ் நாடு

அமுதா உட்பட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் புது நியமனம்!

Staff Writer

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அமுதா, மற்ற 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆட்சி மாற்றத்தையொட்டி வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலாளராக இருந்த அமுதா, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அதையடுத்து இன்று வெளியிடப்பட்டுள்ள அதிகாரிகள் நியமனத்தில், உணவுத் துறைச் செயலாளர் பதவி அமுதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக ககன் தீப் சிங் பேடி, விளையாட்டுத் துறையின் செயலாளராக சத்ய பிரத சாகு, பொதுப்பணிகள் துறையின் செயலாளராக சிரு, எரிசக்தித் துறைக்கு அனில் மேஷ்ரம்,

போக்குவரத்துத் துறைச் செயலாளராக வள்ளலார், வருவாய்த் துறையின் செயலாளராக பழனிச்சாமி, ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளராக பிரசாந்த் வடனேரே, பத்திரப்பதிவு ஐஜியாக அருண் சுந்தர் தயாளன், சென்னை மாநகராட்சி ஆணையராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.