மடிக்கணினி 
தமிழ் நாடு

19ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம்!

Staff Writer

அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம் இந்த ஆண்டில் வரும் 19ஆம் தேதி தொடங்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி மாதத்துக்குள் மாணவர்களுக்கு கணினி வழங்கப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார். 

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 20 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுவிடும் என்றும் வரும் மூன்று மாதங்களுக்குள் 10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் தரப்பட்டுவிடும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எச்பி, டெல், ஏசர் ஆகிய நிறுவனங்களுடன் அரசாங்கம் இதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.