கம்பம் அருகில் பட்டாசு ஆலை விபத்து 
தமிழ் நாடு

தேனியிலும் பட்டாசு ஆலை விபத்து- 2 பேர் பலி!

Staff Writer

விருதுநகர் மாவட்டத்தில் சில நாள்களுக்கு முன்னர் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் கொல்லப்பட்ட துயரத்தின் சுவடு மறைவதற்குள், தேனி மாவட்டத்தில் இன்னொரு விபத்து நேர்ந்துள்ளது. 

கம்பத்துக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளிவாசல் பகுதியில் இலட்சுமி பட்டாசு ஆலையில் இன்று காலையில் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் சூர்யா, தீனதயாளன் ஆகிய இரண்டு பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 

வெடிபொருள் அறை ஒன்றைத் திறக்க முற்பட்ட நிலையில், கதவு திறந்ததுமே அந்த அறை பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இன்று பணிக்கு வந்த நால்வரில் இருவர் இறந்துபோனார்கள். மற்ற இருவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

ஆலையின் உரிமையாளரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.