தமிழ் நாடு

2 கரும்பு 81 ஆயிரம் ரூபாய்... அம்மாடியோவ்!

Staff Writer

தைப் பொங்கல் தமிழர் திருநாளை வழக்கம்போல இந்த ஆண்டும் தமிழர் வாழும் இடமெல்லாம் விமரிசையாகக் கொண்டாடினார்கள். தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களும் பொங்கல் விழா களைகட்டியது. 

பல மாவட்டங்களில் இன்னும் மாடுபிடி, சல்லிக்கட்டு, எருதுவிடுவிழா எனதைத்திருநாள் கொண்டாட்டம் தொடர்ந்துவருகிறது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பார்த்தான்பட்டி புனித வனத்து அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்வேறு காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.

அப்படி காணிக்கையாகச் செலுத்தப்பட்ட முதல் கரும்பு ஏலம் விடப்பட்டது.

முதலில் 101 ரூபாயில் தொடங்கிய ஏலம். ரூ.81,000வரை போனது. 

கோவையில் வசித்துவரும் உள்ளூர்க்காரர் பாலையா என்பவர் குடும்பத்துடன் வந்து ஏலம் எடுத்தார். 

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதால் கடந்த ஆண்டே முதல் கரும்பை ஏலம் எடுக்க முயன்றும் முடியவில்லை என்றும் அதனால் எப்படியாவது இந்த ஆண்டில் முதல் கரும்பை ஏலம் எடுப்பதில் உறுதியாக இருந்ததாகவும் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.