வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை  
தமிழ் நாடு

தமிழக பட்ஜெட்டில் 25% விவசாயத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்: அன்புமணி

Staff Writer

தமிழக பட்ஜெட்டில் 25% வேளாண்மை, அது சார்ந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 2.99%ஆக குறைந்துள்ளதால் வேளாண் துறையை மேம்படுத்த இந்த ஒதுக்கீடு அவசியம் என்று சென்னையில் இன்று பா.ம.க.வின் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டபோது அவர் கூறினார்.

அப்போது, அவர் பேசியதாவது, "இந்த நிதியை ஒதுக்குவதால், விவசாயம் உயிர்பித்து, விவசாயிகளின் வருமானம் மேம்படும். தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 20% பங்களிப்பு தரும் அளவிற்கு வேளாண் துறை உயர வேண்டும்.

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் வழங்க ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும்.

இதுவரை தமிழகத்தில் உள்ள 15,000 ஏரிகள் மறைந்துவிட்டன. மேலும், ஆக்கிரமிப்புகளால் 27,000 ஏரிகளின் நீர் கொள்ளளவு குறைந்துவிட்டது.

நிழல் பட்ஜெட்டில், வேளாண்மை - நீர்ப்பாசனத்திற்காக ₹93,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது." என்று அன்புமணி கூறினார்.

விவசாய மானியங்களை அதிகரித்தல், பயிர்க் கடன் தள்ளுபடி, அதிக கொள்முதல் விலைகள், நீர்ப்பாசனத் திட்டங்களை விரிவுபடுத்துதல், வேளாண்மை, வேளாண் சார்ந்த துறைகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், விவசாய நிலங்களைத் தொழிற்சாலைகள் கையகப்படுத்துவதிலிருந்து பாதுகாத்தல் ஆகியவற்றை அவர் முன்மொழிந்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram