கரூரில் விஜய் பிரச்சாரத்துக்கு 10000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் ஆனால் 27000 பேர் கூடியதாகவும் தமிழக காவல்துறை பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் கூறி உள்ளார்.
செய்தி நிறுவனமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘’தவெக தரப்பில் 10000 பேர் வருவார்கள் என்று கூறி அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் மும்மடங்கு கூடிவிட்டனர். மாலை 3மணியிலிருந்து இரவு 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் காலை 11 மணியில் இருந்தே காத்திருந்தனர்.
விஜய் மாலை 7 மணிக்கு மேல் வந்து சேர்ந்தபோது போதிய உணவு, நீரின்றி பலமணி நேரம் காத்திருந்த கூட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது என்பதுதான் உண்மை நிலவரம்.
500 காவலர்கள் அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விஜய் கூட காவல்துறையை பாராட்டி இருக்கிறார். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் கட்சிக்காரர்களும் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
நெரிசலுக்கு என்ன காரணம் என அறிய ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரும்வரை இதுபற்றிக் கூறமுடியாது’’ என்று அவர் கூறியுள்ளார்.