சேலம் அருகே சோகம் 
தமிழ் நாடு

2 குழந்தைகளைக் கொன்று, தற்கொலை செய்துகொண்ட தந்தை!

Staff Writer

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு (26). இவருடைய மனைவி ஸ்ரீபிரியா(22). ஸ்ரீபிரியா கரும்புச்சாறு விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இவர்களுக்கு மைவிழி (4), தர்ஷன் (2) என்று இரண்டு குழந்தைகள் இருந்தனர். வல்லரசுவின் மனைவி ஸ்ரீபிரியாவிற்கும் வல்லரசுவின் தாயாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீபிரியா மேட்டூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மனைவியைச் சந்தித்து சமாதானம் பேச, அவரின் மாமியார் வீட்டிற்கு வந்தார் வல்லரசு. பின்னர், இரவு தூங்குவதற்காக தனது இரண்டு குழந்தைகளுடன் தனி அறைக்குச் சென்றார்.

காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் தூங்கிய அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீபிரியா, அவரது குடும்பத்தினர் கதவை பலமாகத் தட்டிப் பார்த்தனர். அப்போதும் கதவு திறக்காததால், கதவை உடைத்தனர்.

அப்போது, இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தனர். மேலும், வல்லரசுவும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

மூன்று பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram