தமிழ் நாடு

3 விருது எழுத்தாளர்களுக்கு அரசு உயர்வசதி வீடு!

Staff Writer

விருதுச் சிறப்பு பெற்ற எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு உயர் வருவாய்ப் பிரிவினருக்கான வசதிகள் கொண்ட அரசுக் குடியிருப்பு வழங்கிவருகிறது. இதன்படி, சாகித்ய அகடமி விருது வெற்ற பல எழுத்தாளர்கள் சென்னை முதலிய பல ஊர்களில் உயர்வசதி வீடுகளைப் பெற்று வசித்துவருகின்றனர். 

அதன்படி, இன்று தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் ஆ.இரா. வேங்கடாஜலபதி, பொன்னீலன், தாயம்மாள் அறவாணன் ஆகியோருக்கு அரசு உயர் வருவாய் வீடுகளை ஒதுக்கியதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. 

மூவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.