சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் இன்று முற்பகல் 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் ஆணையம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டைவிட இந்த முறை கூடுதலாக வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது.
கடந்த தேர்தலில் முற்பகல் 11 மணிவரை 26.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இப்போது 11.27 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு ஆகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், திருமணம் முடிந்ததும் ஒரு தம்பதியர் தங்கள் வாக்குகளைச் செலுத்தியது கவனம் ஈர்த்துள்ளது.