அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என ஒன்பது முக்கிய பிரமுகர்கள் இன்று கட்சிதாவி விஜய் தலைமையிலான த.வெ.கவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், கடலூர் எம்சி சம்பத், ஆனந்தன் ஆகியோரும்,
சேலம் சங்ககிரி முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ்,
தருமபுரி பாப்பிரெட்டிபட்டி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி,
சேலம் வீரபாண்டி முன்னாள் எம்எல்ஏ ராஜமுத்து,
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ்,
விருதுநகர் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் ஆகியோரும் இன்று அ.தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தனர்.
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சியின்தலைமை அலுவலகத்தில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.
காலையில் பத்து மணிக்குத் தொடங்குவதாக இருந்த நிகழ்ச்சி அரை மணி நேரத்துக்கும் மேல் தாமதமானது.
பின்னர், த.வெ.க. பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த், அமைச்சர் ஆதவ்ஆகியோர் வந்தவர்களை வரவேற்றுப் பேசினர்.