ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி 
தமிழ் நாடு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி... நிதியுதவி அறிவித்த முதல்வர் விஜய்!

Staff Writer

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில், உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு முதலமைச்சர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே. அருண்ராஜ்,

"நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில், சக்கராம்பாளையம் பகுதியில் வசித்து வந்த, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் சுபிதா என்கிற கலைச்செல்வி, பள்ளி மாணவிகள் நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா ஆகிய மாணவச் செல்வங்கள் உயிரிழந்த தகவலறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைகிறோம். ஈடு செய்ய முடியாத இழப்பை சந்தித்து பெரும் துயரத்தில் வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று தெரிவித்தார்.

மேலும், இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

"நாமக்கள் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தைச் சேர்ந்தக் கல்லூரி மாணவி சுபிதா(19), தனது சகோதரிகளான நிவேதா (17), தனுஸ்ரீ (13), அபிநயா (12) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது, தனியார் கல்லூரிப் பேருத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நிவேதா, தனுஸ்ரீ, அபிநயா ஆகியோர் சம்ப இடத்திலேயும், கல்லூரி மாணவியான சுபிதா என்பவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிப்பதுடன், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும்." என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram