கார் மோதி விபத்து 
தமிழ் நாடு

கார் மோதியதில் பள்ளி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு!

Staff Writer

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மன்னார்குடியில் உள்ள காரக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

சாலையோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த மாணவர்களின் மீது, அவ்வழியாக அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று மோதியது. இதில் 4 மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் லோகேஷ் (12), ரஷித் (13) உட்பட 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

விபத்து குறித்தும், காரை ஓட்டி வந்த நபரைப் பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram