தூய்மைப் பணியாளர் போராட்டம் 
தமிழ் நாடு

4 அமைச்சர்கள் பேசியதில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்!

Staff Writer

பதினாறு நாள்களாக நடைபெற்றுவந்த சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம், நான்கு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இன்று தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

போராட்டத்துக்குத் தலைமைவகிக்கும் உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் பாரதி, அமைச்சர் இராஜ்மோகன் முன்னிலையில் இதை ஊடகத்தவரிடம் தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தூய்மைப் பணியாளர்களுடன், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், இராஜ்மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனும் இதில் பங்கேற்றார்.

தங்களின் ஐந்து கோரிக்கைகள் ஏற்கப்பட்டன என்று பாரதி தெரிவித்தார்.

அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.