சட்டமன்ற உறுப்பினர் விடுதி MLA Hostel 
தமிழ் நாடு

4 மணி நேரத்துக்குப் பின் எம்.எல்.ஏ.வின் அறை திறப்பு... அமலாக்கத் துறை சோதனை!

Staff Writer

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் காலை 6 மணி முதல் தேடுதல் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. 

அவருடைய மகனும் பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான செந்தில்குமார் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதில், சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் உள்ள செந்தில்குமாரின் அறையின் சாவி இல்லை என அங்கிருந்தவர்கள் கூறினர். 

அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை அதிகாரிகள் முன்னிலையில் சற்றுமுன்னர், அமலாக்கத் துறையினர் ஒருவழியாக செந்தில்குமாரின் அறையைத் திறந்து சோதனையைத் தொடங்கினர். 

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிவருகின்றனர்.