சென்னைப் புத்தகக் காட்சி அரங்குகள் ஒதுக்கீடு 
தமிழ் நாடு

48-வது சென்னைப் புத்தகக் காட்சி ஜரூர்... அரங்குகள் ஒதுக்கீடு!

Staff Writer

தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் சங்கத்தின் 48ஆவது சென்னைப் புத்தகக் காட்சி வரும் 27ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதிவரை நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இன்று புத்தகக் காட்சி வளாகத்தில் அரங்குகள் ஒதுக்கும் பணி நடத்தப்பட்டது. 

ஒரே கடையைக் கொண்ட சிறு அரங்குகள், இரண்டு கடைகளைக் கொண்ட இரட்டைக் அரங்குகள், நான்கு கடைகளைக் கொண்ட பெரிய அரங்குகள் ஒதுக்கப்பட்டன. 

புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.