பாலியல் குற்றவாளி சந்திரன் 
தமிழ் நாடு

பாலியல் வன்கொடுமை - ஒரே குற்றவாளிக்கு 5 மரண தண்டனை!

Staff Writer

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரே குற்றவாளிக்கு ஐந்து மரண தண்டனைகளை வழங்கி சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சந்திரன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்சோ வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது. இதில் நீதிபதி கோகுல் கிருஷ்ணன் இன்று தீர்ப்பளித்தார்.

அதில் குற்றவாளிக்கு 5 மரண தண்டனைகளும் 4 ஆயுள் தண்டனைகளும் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 7 இலட்ச ரூபாய் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.