கார் மோதி விபத்து 
தமிழ் நாடு

இரு வேறு விபத்துகளில் பள்ளி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு!

Staff Writer

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மன்னார்குடியில் உள்ள காரக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

சாலையோரமாக நடந்து சென்றுக்கொண்டிருந்த மாணவர்களின் மீது, அவ்வழியாக அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று மோதியது. இதில் 3 மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் லோகேஷ் (11), ரஷித் (11), ராஜமுரளி (12) ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த புருனோ(17) என்பவர் அவருடைய தம்பி ஆலன்(16) , நண்பர்களான ஜெஸ்டின்(16), சுஜித்(16), அஜய்(16) ஆகியோருடன் பள்ளி முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திருச்சி மாவட்டம் மணப்பாறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று இவர்களின் மோட்டார்சைக்கிளின் மீது மோதியது.

இதில், சிறுவர்கள் புருனோ, ஜெஸ்டின் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆலன், சுஜித், அஜய், காரை ஓட்டி வந்த முகமது அலீப், அப்துல் அஜீஸ் ஆகிய ஐவரும் படுகாயமடைந்தனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த 5 மாணவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 இலட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram