500 சவரன் நகை கொள்ளை 
தமிழ் நாடு

மதுரை தனியார் நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளை!

Staff Writer

மதுரையில் உள்ள பிரபல தனியார் நிறுவன நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள மிகவும் பரபரப்பான புறவழிச்சாலையான காளவாசலில் தனியார் நகைக்கடையான தனிஷிக் உள்ளது. இந்தக் கடை திறக்கப்பட்டு 15 நாள்களே ஆகியுள்ள நிலையில், கடையில் வைக்கப்பட்டிருந்த 500 சவரன் நகை திருடு போயுள்ளது.

நேற்று இரவு கடையைப் பூட்டிச் சென்ற ஊழியர்கள், இன்று காலை வழக்கம்போல கடையைத் திறந்தபோது, கடையில் இருந்த நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.

கடையின் பூட்டை உடைக்காமல், சுவர்களில் எந்தவித துளையிடாமலும் இந்த திருட்டு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக மேல் தளத்தில் இருந்த லிப்ட் மூலமாக கடைக்குள் நுழைந்து, திருடர்கள் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கடையில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தபோது, முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நகைகளை திருடிச் செல்வதை காணமுடிந்ததாகக் கூறப்படுகிறது.

பரபரப்பான சாலையில், இந்தத் துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீசார், தடவியல் நிபுணர்கள் இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram