தேர்தல் வடிவமைப்பு - எஸ்.கார்த்தி
தமிழ் நாடு

மதியம் 1 மணிக்கு 56.81 சதவீதம் வாக்குப்பதிவு!

Staff Writer

சட்டப்பேரவைத்தேர்தலில் இன்று காலையில் தொடங்கி மதியம் ஒரு மணிவரை முடிந்துள்ள வாக்குப்பதிவில், 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதாவது, 3 கோடியே 25 இலட்சத்து 76 ஆயிரத்து 724 பேர் தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். 

இதுவே, கடந்த தேர்லில் மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீதம் பேரே வாக்களித்திருந்தனர். 

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலைவிட 17 சதவீதம் வாக்குப்பதிவு கூடியுள்ளது.