கார் விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு 
தமிழ் நாடு

கேரளத்தில் கோர விபத்து... தமிழக மாணவர்கள் 8 பேர் பலி!

Staff Writer

கேரளாவில் உள்ள திருச்சூரில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் பனம்பிக்குன்னு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு 11.40 மணியளவில், அப்பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்று கடுமையாக மோதியது.

இந்த விபத்தில் கார் முழுவதுமாக சிதிலமடைந்தது. இந்த பயங்கர விபத்தில், காரில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

போலீசார் விசாரணையில், அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram