தமிழ் நாடு

82 ஆடுகள் கொலை- போதை லாரி ஓட்டுநரால் கொடூரம்!

Staff Writer

போதையில் இருந்தவர் ஓட்டிவந்த கரும்பு லாரி சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டு மந்தையில் புகுந்தது. இதில் 82 ஆடுகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டன. 

கொடூரமான இந்த சம்பவம், திருச்சியை அடுத்த தச்சன்குறிச்சி அருகில் நிகழ்ந்தது.

நித்தீஷ் என்பவர் 250-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கொண்ட மந்தையை வழக்கம்போல தன்னுடைய தொழில் வழித்தடமாக ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போதுதான் இந்தத் துயரம் நேர்ந்தது. 

கரும்பு லாரியை ஓட்டிவந்த நல்லதம்பி என்பவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதுதான் காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.