முதல்வர் விஜய் 
தமிழ் நாடு

தமிழகத்தில் 2 நாள்களில் 9 கொலைகள்... மிக்சர் சாப்பிடும் முதல்வர்! - உதயநிதி

Staff Writer

பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாள்களில் 9 கொலைகள் நடந்துள்ள நிலையில், என்ன செய்கிறார் முதலமைச்சர் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியதாவது:

"திருநெல்வேலியில் டால்டன், நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.

குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.

இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் என கடந்த 2 நாள்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.

இப்படி கொத்துக்கொத்தாக கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்? இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram