வாக்குப்பதிவு 
தமிழ் நாடு

எஸ்ஐஆர் போய் எஸ்எஸ்ஆர்... த.வெ.க., தி.மு.க. உட்பட 9 கட்சிகள் வெளிநடப்பு!

Staff Writer

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பாக சென்னையில் இன்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., காங்., த.வெ.க., ஆம் ஆத்மி, வி.சி.க., நா.த.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைக் கண்டித்து இக்கட்சிகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்காததால் 12 கட்சிகள் கலந்துகொண்டன.

இதில் 9 கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், பா.ஜ.க., அ.தி.மு.க., தேசிய மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே பங்கேற்று கருத்துத் தெரிவித்தன.