குளிர்சாதனப் பெட்டி 
தமிழ் நாடு

960 சமூகநீதி விடுதிகளுக்கு இன்வெர்ட்டர், குளிர்சாதனப் பெட்டி வழங்க ரூ.25 கோடி!

Staff Writer

பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலன் சார்ந்த துறைக்கான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் வே. சம்பத்குமார் வெளியிட்டார்.

அறிவிப்புகள் :

1. 960 சமூகநீதி விடுதிகளுக்கு இன்வெர்ட்டர், குளிர்சாதனப் பெட்டி, தண்ணீர் சுத்திகரிப்புக் கருவிகள் ஆகியவை வழங்க ரூ. 25. 76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நவீன சிகைதிருத்தும் அழகுநிலையம் அமைக்க ஒரு பயனாளிக்கு ரூ. 1.50 லட்சம் வீதம் 100 பயனாளிகளுக்கு ரூ. 1.50 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

3. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 10,000 மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும்.

4. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5000 தேய்ப்புப் பெட்டிகள் ரூ. 4. 50 கோடியில் வழங்கப்படும்.

5. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ. 3 கோடி செலவில் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலவாரியம் அமைக்கப்படும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram