ஆதவ் அர்ஜுனா - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 
தமிழ் நாடு

ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் - ஆதவ் ஆர்ஜூனா குற்றச்சாட்டு

Staff Writer

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. பல நாடுகளில் சட்டவிரோதமாக இணையத்தில் இதைத் தரவிறக்கம் செய்துவருகின்றனர். 

இதன் பின்னணியில் பா.ஜ.க.வின் அமைச்சர் எல்.முருகனும் துணைமுதலமைச்சர் உதயநிதியும் இருப்பதாக த.வெ.க .தரப்பில் புகார் கூறியுள்ளனர். 

தனியார் தொலைக்காட்சிக்கு த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா அளித்த பேட்டியில், இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.