ஆவின் பால் 
தமிழ் நாடு

பால் விலை உயர்வு இல்லை - ஆவின் நிர்வாகம் விளக்கம்

Staff Writer

ஆவின் பால் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு தமிழக அரசிடம் அதன் நிறுவனம் கேட்டதாக வெளியாகும் செய்தி தவறானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் :

"ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது. ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தரமான பால், பால் பொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் நலன், பால் கொள்முதல் விலை, நுகர்வோரின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருகிறது.

பால் விலை உயர்வு தொடர்பாக நாளிதழ், சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறான செய்தி. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram