மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 95.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கணித ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பல்வேறு கல்வியியல் கொள்கைகள் சார்ந்து செயல்பட்டவர்.
மாணவர்- ஆசிரியர் உறவு, பாடத்திட்டங்கள், கல்விக் கலைத்திட்டங்கள் ஆகியவை தொடர்பாக தொடர்ந்து தன்னுடைய கருத்துகளை முன்வைத்து சிறந்த கல்வியாளராகச் செயல்பட்டார்.
ஐந்தாவது முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சமச்சீர் கல்வி முறை திட்டம் கொண்டுவரப்பட்டடது. அந்த அரசுக் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.
இறுதிக் காலம்வரையிலும் மூன்றாம் தலைமுறை கல்வியியலாளர்களுடனும் கல்விச் செயற்பாட்டாளர்களுடனும் நட்புடன் ஊக்கமூட்டியபடி இருந்தவர் இராஜகோபாலன்.
இவரின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.