விஜய்யின் காரைக்குடி பயணத்தில் விபத்து 
தமிழ் நாடு

விபத்துடன் தொடங்கிய விஜய்யின் காரைக்குடி பயணம்!

Staff Writer

த.வெ.க.தலைவர் விஜய் இன்று மதியம் காரைக்குடியில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர் சென்னையிலிருந்துதனி விமானத்தின் மூலம் மதுரைக்குச் சென்றார். அங்கிருந்து சாலைவழியாக காரைக்குடிக்குப் புறப்பட்டார்.

ஆங்காங்கே இரசிகர்களின்ஆரவாரம் வரவேற்புக்கு இடையே அவருடைய வாகனம் காரைக்குடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 

அப்போது விஜய்யின் வாகனத்தைத்தொடர்ந்து அவருடையதொண்டர்கள் இருசக்கர வாகனங்களின் பின்தொடர்ந்தனர். 

மதுரையிலிருந்து சிறிது நேரப் பயணத்தில் வழக்கம்போல பின்தொடர்ந்த இருசக்கர வாகனத்தொண்டர்கள் விபத்தில் சிக்கி கீழே விழுந்தனர். காயம்படைந்த அவர்களை மருத்துவமனையில் சேர்க்க உடன்வந்தவர்கள்ஏற்பாடு செய்தனர். 

ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் விஜய்யின் வாகன வரிசை நிற்காமல் சென்றபடி இருந்தது.