த.வெ.க. தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமா ரோஸ், இன்று அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
பிரபல லாட்டரி வியாபாரி மார்ட்டினின் மனைவியான இவர், முன்னதாக, பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்துவந்தார். அண்மையில்தான் அக்கட்சியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், இன்று எட்ப்பாடி பழனிசாமியை அவரது சென்னை, பசுமைவெளிச் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
இந்தக் குடும்பத்தில் மார்ட்டின் தி.மு.க. ஆதரவாளர் எனக் கூறப்பட்டநிலையில், அவரின் ஒரு மகன் தமிழர் விடியல் கட்சி என நடத்திவருகிறார். இன்னொரு மகன், அண்மையில் புதுச்சேரியை மையமாக வைத்து புதுக் கட்சி தொடங்கி, பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.