எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கைது நடவடிக்கை குறித்த விசாரணையை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகப் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இவரைக் கைது செய்யத் தடைக் கோரியும், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், நண்பகல் 12 மணிக்கு இந்த வழக்கு விசாரணை நடத்தப்படும் என்றும், அதுவரை உதயநிதியைக் கைது செய்யக் கூடாது என்றும் அறிவித்திருந்தனர்.
ஆனால், விசாரணைக்குத் தேவையான வழக்கு ஆவணங்கள் வராததால் பிற்பகல் 02.15 மணிக்கு இந்த வழக்கு விசாரணை தொடங்கும் என்று நீதிபதி இளந்திரையன் கூறினார்.
இதனால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டில் வைத்து, அவரைக் கைதுசெய்த போலீசார், விசாரணைக்காக தஞ்சைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
உதயநிதியின் கைது நடவடிக்கையை எதிர்த்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.