எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

கருணைத்தொகை ரூ.10ஆயிரம்- அ.தி.மு.க. 3ஆம் கட்ட வாக்குறுதி!

Staff Writer

அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளார். 

கட்சியின் மறைந்த பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்த நாள் இன்று அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு வந்த பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து, மூன்றாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

”நடப்பு ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்கட்டணம், வரிகள் உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைக்கும்வகையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்படும்.” என்று அவர் அறிவித்தார்.

பதிவுசெய்து வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை அதிகரிப்பு, ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், மீன்பிடித் தடைக் கால நிவாரணம் 12ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு என இந்த வாக்குறுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.