தமிழ் நாடு

4ஆவதாகப் பதவிவிலகிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.!

Staff Writer

விஜய் தலைமையிலான அரசாங்கத்துக்கு அ.தி.மு.க. தரப்பில் ஒரு குழு ஆதரவு தந்த நிலையில், இன்னும் அந்தப் பரபரப்பு அடங்கவில்லை. 

அதிருப்தி அ.தி.மு.க. அணியைச் சேர்ந்த மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேற்று திடீரென தங்கள் பதவிகளிலிருந்து விலகினர்.

இந்த நிலையில், நான்காவதாக, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையாவும் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை அளித்தார். 

முன்னதாக, அவர் தட்டச்சு செய்யப்பட்ட காகிதத்தில் விலகல் கடிதத்தைக் கொடுத்ததும் அதை பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

கையெழுத்தில் எழுதித் தருமாறு அவர் கூறியதன்படி இசக்கி சுப்பையா விலகல் கடிதத்தைக் கொடுத்தார். 

அதை ஏற்றுக்கொண்டதாக பின்னர் அவைத்தலைவர் தெரிவித்தார்.