அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தனபாலும் ஆளுநர் அர்லேகரை இன்று காலையில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குதிரை பேரம் மூலமாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை த.வெ.க. அரசு விலைபேசுவதைத் தடுக்கவேண்டும் என்றும் அரசமைப்புச் சட்டம் 167ஆம் பிரிவின்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தந்த கடிதத்தை ஆளுநரிடம் தந்ததாக கிருஷ்ணமூர்த்தி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தலைமைச்செயலகத்தை த.வெ.க. கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும் ஆளுநரிடம் தரப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.