தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு கோஷம் 
தமிழ் நாடு

தாராபுரம் த.வெ.க. வேட்பாளரைக் கண்டித்து அ.தி.மு.க. ஒழிக கோஷம்!

Staff Writer

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மனுத்தாக்கல் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இன்று காலையில் த.வெ.க. சார்பில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகிய சத்தியபாமா வேட்புமனு தாக்கல்செய்தார்.

அப்போது, மூத்த அமைச்சர் செங்கோட்டையன், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

சத்தியபாமா மனுத்தாக்கல் செய்ய வந்தபோது, அங்கு திரண்டிருந்த அவருடைய முன்னாள் சக கட்சியினரான அ.தி.மு.க.வினர் அவரைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

வேன்களில் அமர்ந்தபடி துரோகிகள் ஒழிக துரோகிகள் ஒழிக என அவர்கள் விடாமல் முழக்கமிட்டபடி இருந்தனர்.

அவ்வளவு களேபரத்தையும் கண்டுகொள்ளாமல் சத்தியபாமா தன்னுடைய வேலையைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் இலட்சுமணன், கோவை எம்.பி. சுப்பராயனுடன் வந்து எந்த ஆரவாரமும் இல்லாமல் தன் மனுவைத் தாக்கல்செய்துவிட்டுச் சென்றார்.