விஜய் வாகனத்தில் ஏறிய உச்சவெறி இரசிகர் 
தமிழ் நாடு

விஜய் வாகனத்தில் ஏறிய உச்ச வெறி இரசிகர்!

Staff Writer

வேலூரில் இன்று நடைபெறும் த.வெ.க. கூட்டத்துக்காக சென்னையிலிருந்து சாலைவழியாக வேனில் பயணம் செய்தார், அக்கட்சியின் தலைவர் விஜய். கூட்டத்துக்காக பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது. ஆனால் அது எதையும் பொருட்படுத்தாமல், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி விஜய் சென்ற வழியில் ஆங்காங்கே வயல் வெளிகளில் விவசாயிகளின் திட்டுகளைக் காதில் போட்டுக்கொள்ளாமல் இளைஞர்கள் விஜய்யைப் பார்க்க ஆவலோடு திரண்டிருந்தனர். பயிர்களையெல்லாம் மிதித்து அவர்கள் நாசம் செய்ததாக விவசாயிகள் முறையிட்டனர். 

விஜய்யின் வாகனம் வேலூரை நெருங்க நெருங்க இரசிகர்களின் வெறி உச்சகட்டத்தை எட்டியது. வேலூர் எல்லைக்குள் விஜய்யின் வேன் நுழைந்து கூட்டம் நடக்கும் இடத்தை நெருங்கியபோது, இரசிகர் ஒருவர் விஜய்யின் வேன் மீது பாய்ந்து முரட்டு முத்தம் கொடுத்தார். அவரின் செய்கையைக் கண்டு சுற்றிலும் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.