அதிமுக அலுவலகம் 
தமிழ் நாடு

அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு!

Staff Writer

அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவை திருத்தியமைத்து கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழுவில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அவர் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், அதிமுகவில் 4 பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அந்த குழுவில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல் 10 பேர் கொண்ட தேர்தல் பிரசாரக் குழுவையும் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்களையும் அமைத்து கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அவர் அறிவித்த தேர்தல் பிரசாரக் குழுவில், மு.தம்பிதுரை, தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, பென்ஜமின், உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.