பா.ஜ.க.வின் நெல்லை மண்டல வாக்குச்சாவடி முகவர் மாநாட்டுக் கூட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது. அதில் சிறப்புப் பேச்சாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
மாநிலத் தலைவர்கள் பேசியதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளில் இருந்துவிட்டு - கடைசியாக தி.மு.க.வின் செய்தித்தொடர்பாளராகவும் இருந்த கே.எஸ். இராதாகிருஷ்ணன் இன்று முறைப்படி பா.ஜ.க.வில் சேர்ந்தார். அதன் அடையாளமாக அமித்ஷாவுக்கு அவர் துண்டு போர்த்த முயன்றார். அந்தத் துண்டை வாங்கி அவருக்கே அமித்ஷா போர்த்திவிட்டார்.
பின்னர் பேசிய அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆகியோர் தம் மகன்களைப் பதவிக்குக் கொண்டுவரவே நோக்கம் என முன்னைய கூட்டங்களில் பேசியதையே மீண்டும் குறிப்பிட்டார்.
கடந்த தேர்தலில் பா.ஜ.க. 18+ சதவீத வாக்குகளை பா.ஜ.க. வாங்கியது; அ.தி.மு.க. 21 சதவீத வாக்குகளைப் பெற்றது; இந்த முறை இந்த இரண்டையும் கூட்டினாலேயே 39 சதவீத வாக்குகள் நமக்குக் கிடைத்துவிடும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.